ADVERTISEMENT

இறுதி நேரத்தில் தொய்வு; பரபரப்பில் உத்தரகாசி

10:11 PM Nov 22, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.

மீட்புப் பணிகளில் 11வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் உள்ளே உள்ளவர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் இறுதிக் கட்டப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. சுரங்கப்பாதையின் மேலே இருந்து செங்குத்தாக துளையிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கம்பி போன்ற பொருள் குறுக்கே இருப்பதால் எந்த உபகரணத்தை கொண்டு அகற்றலாம் என மீட்புக் குழு மீண்டும் ஆய்வு செய்து வருகிறது. 15 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினரின் ஆய்வுக்கு பின் மீண்டும் துளையிடும் பணி தொடங்கும். அதன் பின்னரே உள்ளே இருப்பவர்கள் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்தத் தொய்வு அங்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT