/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/last-tribute-std.jpg)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் த்ரிவேந்த்ர சிங் ராவத் நேரில் வந்து உயிரிழந்த ராணுவ வீரர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது இந்த தாக்குதலில் தனது தந்தையை இழந்த சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அந்த சிறுமிக்கு அருகிலிருந்த வீரர்கள் மற்றும் மக்கள் ஆறுதல் தெரிவித்து அழைத்து சென்றனர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியை தொடர்ந்து அந்த வீரரை அடக்கம் செய்யப்பட உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)