நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேகாட்டேரிபகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர்விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது.ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் ஏழு பேர் உயிரிழந்து விட்டதாக தமிழக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில்பிபின் ராவத், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்த விபத்துதொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமருக்கு இந்த விபத்து தொடர்பாக விளக்கமளித்துள்ளதாகஅதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்தநிலையில்பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ளபிபின் ராவத்தின் வீட்டிற்கு சென்று திரும்பியுள்ளார். அங்கு அவர் பிபின் ராவத்தின் மகளை சந்தித்து பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.