இந்தியாவில் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை வரை 1 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதியாகியுள்ளது,. இந்தநிலையில்மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்கிற்கு கரோனா தொற்றுஉறுதியாகியுள்ளது. இதனை ராஜ்நாத்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளராஜ்நாத் சிங், சமீபகாலமாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.