Advertisment

விபத்தில் சிக்கிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் - பிரதமருக்கு விளக்கமளித்த ராஜ்நாத் சிங்!

rajnath singh

Advertisment

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேகாட்டேரிபகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர்விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது.ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்த நிலையில், 11 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிபின் ராவத்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், விபத்து நடந்த இடத்திற்குத் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவிரைந்துள்ளார். இன்று (08.12.2021) மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்கோவை செல்கிறார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில் இந்த விபத்து குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

முன்னதாக ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை சந்தித்து விபத்து குறித்து விளக்கமளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விமானப்படை தளபதி, சூலூர் விமானப் படைத்தளத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe