Advertisment

பாஜகவின் அழிவு தொடங்கி விட்டது - என்.சி.பி காட்டம்!

தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையிலான பாஜக அரசு, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நாளை (புதன்கிழமை) தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், துணை முதல்வராக கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்று கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், திடீரென இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். தேசியவாத காங்கிரசின் ஆதரவின்றி, சட்டப்பேரவையில் தம்மால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாது என தீர்மானித்த தேவேந்திர ஃபட்னவிஸ் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisment

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்தியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை, மகாராஷ்டிராவின் சாணக்கியர் என, அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்று கொள்ளும்படி, சரத் பவார் கேட்டு கொண்டுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்க தாக்கரே ஒப்புக் கொண்டுள்ளார். அரசியல் சாணக்கியர்களை தோற்கடித்த மகாராஷ்ராவின் அரசியல் சாணக்கியராக சரத் பவார் திகழ்கிறார். அதிகாரம், ஆவணத்துடன் செயல்பட்டு வரும் பாஜகவின் அழிவு மகாராஷ்டிராவில் ஆரம்பாகிவிட்டது என நவாப் மாலிக் காட்டமாக கூறியுள்ளார்.

NCP PARTY LEADER
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe