/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/deepveer.jpeg)
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடியின் திருமணம் இத்தாலியில் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, திருமணம் முடிந்தது என்பதை வெளியுலகுக்கு தெரிவித்துள்ளனர். இந்த திருமணம் குறித்த முதல் புகைப்படமும் இவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள்தான். முன்கூட்டியே புகைப்படம் வெளிவராததற்கு காரணம் இந்த திருமணத்தில் யாரும் தங்களின் மொபைலில் இருந்து புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது விதி. யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பதற்காக மொபைல் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீபிகா மற்றும் ரன்வீரே அவர்களது திருமண புகைப்படத்தை பதிவு செய்யப்பட்டவுடன் பாலிவுட் நடிகர், நடிகையர் என்று அனைவரும் தங்களின் வாழ்த்து மழைகளை பொலிந்தனர். அதேபோல ரசிகர்களும் அதை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனால் ட்விட்டரில் நேற்று இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள்தான் ட்ரெண்டாக இருந்தது. மேலும் இன்னுமொரு தகவல், ரன்வீர் மற்றும் தீபிகா வீட்டில் இருந்து திருமணத்திற்காக இத்தாலிக்கு நூறு பேருடன் சென்றதாகவும், இதனால் இந்த திருமணத்தை டெல்லியில் உள்ள ஒரு நிருவனத்தில் கோடிக்கணக்கில் இன்சூர் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமான விபத்து, ஓட்டலில் தீவிபத்து, குண்டு வெடிப்பு போன்றவைகளை குறிப்பிட்டு காப்பீடு செய்து உள்ளனர். காப்பீடு தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)