Advertisment

‘ட்ரெண்டிங்’ ஆன தீபிகா கோஸ்! -நெட்டிசன்கள் குஷியோ குஷி! 

புருவம் சிமிட்டி கண்ணடித்து இணைய உலகில் பிரியா வாரியர் எப்படி ‘ட்ரெண்டிங்’ ஆனாரோ, அதுபோலவே, ஒரே இரவில் நெட்டிசன்களைக் கவர்ந்து ‘ட்ரெண்டிங்’ ஆகியிருக்கிறார் தீபிகா கோஸ்.

Advertisment

d

யார் இந்த தீபிகா கோஸ்?

24 வயதே ஆன இந்த நடனக் கலைஞர், ஐ.பி.எல். 2019 ஹைதராபாத் போட்டியில், ஆர்.சி.பி.யின் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) வெற்றிக்காக, சிரித்து ஆடி, கொடி அசைத்து, அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தோள்பட்டையிலிருந்து கீழ் இறங்கிய ‘ரெட்-டாப்’ உடையில் குதித்துக் குதித்துக் கவர்ச்சிகரமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட தீபிகா கோஸை, கேமரா மீண்டும் மீண்டும் காட்டியபோது, லயித்துப்போனார்கள் ரசிகர்கள்.

Advertisment

m

2019-ல் நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்தமானவர் ஆகிவிட்டார் தீபிகா கோஸ். அதனால், அவருடைய பெயரில் பல போலி கணக்குகளை உருவாக்கிவிட்டனர். அதே நேரத்தில், தீபிகா கோஸை வலைத்தளத்தில் தொடர்பவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் எகிறியபடியே இருக்கிறது. ‘ஆர்.சி.பி. கேர்ள்’ என்றழைக்கப்படும் தீபிகா கோஸ், சமூக ஊடகங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவராகிவிட்டார்.

d

இவரை கிரிக்கெட் ரசிகராக மட்டும் கருதிவிட முடியாது. ஷாருக்கான் போன்ற பாலிவுட் பிரபலங்களோடு இவர் எடுத்த புகைப்படங்களெல்லாம் தற்போது வெளிவந்திருக்கின்றன. எதிர்காலத்தில் தீபிகா கோஸ் பாலிவுட் பிரபலமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

d

‘என்ன ஒரு அழகியடா!’ என்றும் ‘ஆர்.சி.பி. வெற்றி அடைந்ததே தீபிகா கோஸால்தான்!’ என்றும் மீம்ஸ்களைத் தெறிக்கவிடுகிறார்கள் நெட்டிசன்கள்!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe