Advertisment

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பாண்டவபுரம் அருகிலுள்ள கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் இது அதிகரிக்ககூடும் என்று சொல்லப்படுகிறது. அதில் பள்ளி குழந்தைகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “மாண்டியாவில் பள்ளி பேருந்து கழிழ்ந்து விழுந்ததில் 20 பேர் பலியாகியுள்ள செய்தியை கேட்டதில் மிகவும் வருத்தம் அடைகிறேன். இறங்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், காயமடைந்தவர்கள் வெகு விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன்” என்றார்.