Skip to main content

அதானிக்கு இறங்கு முகம்; மூன்றாவது நாளாக வீழ்ச்சி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

 decreace to Adani; falls for third day

 

அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடந்த சில வருடங்களாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகே அதானியின் சொத்து மதிப்பு மிகப்பெருமளவில் உயர்ந்துள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு தாறுமாறாக வளர்ச்சி அடைந்ததை அடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். கடந்த சில நாட்களாக அதானி குழுமம் பங்கு சரிந்துள்ளதால் சிறிய வித்தியாசத்தில் இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்.

 

இந்தநிலையில் தான் புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், இந்தியாவின் அதானி குழுமம் பங்குச் சந்தையில் ஏராளமான மோசடிகளைச் செய்துள்ளதாகவும், அக்குழுமத்திற்கு பெருமளவில் கடன் உள்ளதாகவும் கூறி 106 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.  இந்த அறிக்கை வெளியான நொடியிலிருந்து அதானி குழுமத்தின் பங்கு பெருமளவில் சரிந்துள்ளது. ஆய்வறிக்கை வெளியான ஜனவரி 25 ஆம் தேதி மட்டும் அதானி குழுமம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பை இழந்தது. இதனையடுத்து தீங்கு இழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஆதாரமற்றது என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம் எனத் தெரிவித்தது.

 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஹிண்டன்பர்க், அறிக்கையின் முடிவில் 88 கேள்விகளை முன்வைத்துள்ளோம். ஆனால் எந்த கேள்விக்கும் பதிலளிக்காத அதானி குழுமம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் உறுதியாக இருக்கிறோம். இதுகுறித்த ஆவணங்கள் தொடர்பான நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது எனக் கூறியுள்ளது. இந்தப் புகார்களுக்கு மத்தியில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மூன்றாவது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளன. அதானி  டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி வில்மர் உள்ளிட்ட பங்குகளின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மக்களவைத் தேர்தல் எதிரொலி; ஒரே நாளில் சரிவைக் கண்ட அம்பானி, அதானி!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
 Ambani, Adani who saw the decline in one day for Lok Sabha Election Echoes

உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிந்த பிறகு இந்தியாவில் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.

அதில், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 150க்கும் குறைவான தொகுதிகளையும் என்று கூறியிருந்தது. அந்த முடிவுகளால், பங்குச்சந்தை வர்த்தகம் வரலாற்றில் இல்லாத ஏற்றம் கண்டது. இதனையடுத்து, கடந்த 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. 

அதில்,  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது. இந்த முடிவுகளால் பங்குச்சந்தை வர்த்தகம் ஒரேயடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

பங்குச்சந்தை வர்த்தகம் வீழ்ச்சியால் பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோரின் சொத்து மதிப்பில் ஒரே நாளில் பெரிய அளவில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நிறுவனமான புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ‘பங்குச்சந்தை சரிவால் கவுதம் அதானி, தனது சொத்து மதிப்பில் சுமார் 24.9 பில்லியன் டாலர்களை இழந்து தற்போது 97.5 பில்லியன் டாலர்களைச் சொத்து மதிப்பாகக் கொண்டுள்ளார். அதே போல், முகேஷ் அம்பானி, தனது சொத்து மதிப்பில் 9 பில்லியன் டாலர்களை இழந்து தற்போது 106 பில்லியன் டாலர்களைச் சொத்து மதிப்பாகக் கொண்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது 11-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல்...” - ராகுல் காந்தி எம்.பி.!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
 "Biggest coal scam in BJP regime..." - Rahul Gandhi MP!

இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்தது கடந்த ஆண்டு அம்பலமாகி இருந்தது. இந்த ஊழல் குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற இதழ் இந்த ஊழலை அம்பலப்படுத்தி இருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி ஊழலில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. மேலும் இந்தோனேசியாவில் வாங்கப்படும் நிலக்கரி இந்தியாவிற்கு வந்து சேரும் போது 3 மடங்கு விலை உயர்த்தப்படுகிறது என அந்த இதழ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக வெளியான செய்தியை குறிப்பிட்டு ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் மோடியின் அபிமான நண்பர் அதானி மூன்று மடங்கு விலைக்கு குறைந்த தர நிலக்கரியை விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார். அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI) மற்றும் வருமானவரித்துறை (IT) போன்ற விசாரணை அமைப்புகள் இந்த வெளிப்படையான ஊழலில் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் மோடி சொல்வாரா?. ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு இந்த மெகா ஊழலை இந்திய அரசு விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு காட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 "Biggest coal scam in BJP regime..." - Rahul Gandhi MP!

முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில் இந்தோனேசியாவில் இருந்து வாங்கிய நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக வைத்து அதானி நிறுவனம் விற்றதும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. அதாவது இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் மூலம் 24 கப்பல்களில் நிலக்கரி கொண்டு வரப்பட்டு இறக்குமதி செய்த ஒட்டுமொத்த நிலக்கரியும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கே விற்பனை செய்யப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.