
கேரளாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாகத்தினசரி கரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இந்தநிலையில் கேரளாவில் இன்று தினசரி கரோனா பாதிப்பு 19,688 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 135 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 39.66 லட்சம் பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 2.38 லட்சம் பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21,631 ஆக உள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறிய அளவில் தொற்று குறைய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)