தமிழக-கர்நாடக எல்லையில் மேகதாது அணை கட்டுவதுதொடர்பாகக்கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசு சார்பிலும்மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதோடு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச்சந்தித்து இது தொடர்பாகப் பேசியிருந்தார்.
தொடர்ந்து காவிரியில் மேகதாது அணைக்கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக அண்மையில் கர்நாடகமுதல்வராகப்பொறுப்பேற்றபசவராஜ்பொம்மைதெரிவித்திருந்தார். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்றும்தெரிவித்திருந்தபசவராஜ்பொம்மை,மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர்கஜேந்திரசிங்ஷெகாவத்தைகடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் நடக்கவிருக்கும் காவிரிநதிநீர் மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் மேகதாது அணை குறித்தவிரிவானதிட்ட அறிக்கை குறித்துவிவாதிக்கத்தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.