டெல்லி ஜான்சிராணி சாலையில் அனஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 5.22 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisment

   Death toll rises to 43 in Delhi fire incident

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீ விபத்தில் சிக்கி இருந்த 59க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்து ஏற்பட்டது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.