மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

DEARNESS ALLOWANCE

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2021 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டுவழங்கப்படவுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால்48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.

Central Government DEARNESS ALLOWANCE
இதையும் படியுங்கள்
Subscribe