Advertisment

இறுதி சடங்கின் போது உயிர் பிழைத்த முதியவர்... ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பகல்லா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாலிக் என்ற முதியவர். 55 வயதான இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆடு மேய்க்க சென்ற அவர், வீடு திரும்பவில்லை. அதனால் அவரது உறவினர்கள் மாலிக்கை தேடி சென்றுள்ளனர். அப்போது ஆடு மேய்க்கும் பகுதியில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

Advertisment

இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் மாலிக் உயிரிழந்துவிட்டார் என எண்ணி இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். கடைசியாக அவரை மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மாலிக்கின் தலை அசைந்துள்ளது. இதனைப் பார்த்த சிலர் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். பின்னர் சிலர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாலிக்கை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கடுமையான காய்ச்சலால் மாலிக் மயங்கி விழுந்திருப்பதாக தெரிவித்துள்ளார். நல்லவேளையாக அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக உடலில் அசைவு தெரிந்ததால் மாலிக் காப்பாற்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

deadbody
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe