Skip to main content

வெளியான மகளின் ஆபாச காணொலி; தட்டிக் கேட்ட ராணுவ வீரர் அடித்துக் கொலை

 

Daughter's video released; A soldier incident in Gujarath

 

சொந்த மகளின் ஆபாச காணொலியை வெளியிட்ட நபர்களை தட்டிக் கேட்ட ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பான கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சக்லஸி என்ற கிராமத்தில் இராணுவ எல்லை பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றி வரும் இராணுவ வீரரின் மகளுடைய ஆபாச காணொலியை அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இது நிகழ்ந்த நிலையில் இதனை அறிந்த சிறுமியின் தந்தையான அந்த ராணுவ வீரர் அந்தச் சிறுவனின் வீட்டிற்குச் சென்று கண்டித்துள்ளார். அப்பொழுது சிறுவனின் குடும்பத்தார் மற்றும் சிறுவனின் ஆதரவு கும்பல் இராணுவ வீரரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

Daughter's video released; A soldier incident in Gujarath

 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவானார்கள். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஏழு பேரில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகளின் ஆபாச காணொலியை வெளியிட்டது தொடர்பான பிரச்சனையில் ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !