Daughter went to court to save her father's life

தந்தைக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதைத்தொடர்ந்து அவரது 17 வயது மகள் தனது கல்லீரலை தானம் செய்துள்ளார்.

Advertisment

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் பிரதீஷ் இவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறினர். உடல் உறுப்பு தானம் பெறுவோர் பட்டியலில் பெயர் பதிவு செய்தும் உறுப்பிற்காக நெடுநாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Advertisment

மேலும் பிரதீஷின் உடல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே சென்றது. இதனால் அவரது 17 வயது மகள் அவருக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். ஆயினும் மருத்துவர்கள் அதை ஏற்க மறுத்தனர். தொடர்ந்து அந்தச் சிறுமி கேரள உயர்நீதிமன்றத்தை நாடினார். தனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதி வேண்டினார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் சிறுமி அவரது தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய அனுமதி வழங்கியது.

சிறுமியின் போராட்டத்தை சுட்டிக்காட்டி இதுபோன்ற மகள் பெற்றோருக்குக் கிடைத்தது வரம் எனக் குறிப்பிட்டனர்.