Advertisment

59 வயதில் தாயிற்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மகள்

The daughter married her mother at the age of 59

Advertisment

கேரளாவில் தனது தாயிற்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மகளை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரளா, திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரதிமேனன். இவருக்கு இரண்டு மகள்கள். இரண்டு மகள்களுக்கும் திருமணமான நிலையில் ரதிமேனன் கணவர் சில நாட்களுக்கு முன்பு காலமானார். ரதிமேனன் தனிமையில் தவித்து வந்ததை அறிந்த மகள்கள். தனது தாயிற்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் திருச்சூரில் உள்ள திருவெம்பாடி கோவிலில் 59 வயதான தனது தாயிற்கும் 63 வயதான அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்த திவாகர் என்பவருக்கும் திருமணம் செய்துவைத்தனர். திவாகர் என்பவருக்கும் இரண்டுமகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ ரதிமேனன் மகள்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

daughter Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe