Skip to main content

இறந்த தாயின் உடலுடன் 4 நாட்களாக வசித்த மகள்; அடுத்தடுத்து நேர்ந்த சோகம்!

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Daughter lived with mother's for 4 days in karnataka

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி ஷெட்டி (62). 15 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த ஜெயந்திக்கு பிரகதி ஷெட்டி (32) என்ற மகள் இருந்தார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பிரகதியை, தாய் ஜெயந்தி கவனித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், ஜெயந்தி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அதனால், ஜெயந்திக்கு சில மாதங்களுக்கு முன் கால் ஒன்று வெட்டி எடுக்கப்பட்டது. இருப்பினும், மகளை ஜெயந்தி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 1 வாரமாக ஜெயந்தி வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 16ஆம் தேதி அன்று ஜெயந்தி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜெயந்தியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது ஜெயந்தி வீட்டில் இருந்து செல்போன் ஒலி கேட்ட போதும், யாரும் எடுக்கவில்லை.

இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ஜெயந்தி வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது பிரகதி மயக்கமாக கிடந்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள், இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஜெயந்தி வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு ஜெயந்தி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும், மயங்கிய நிலையில் இருந்த பிரகதியை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஜெயந்தி மற்றும் பிரகதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயந்தி உயிரிழந்ததை அறியாமல், மனநலம் பாதிக்கப்பட்ட பிரகதி உடலுடன் 4 நாட்களாக இருந்துள்ளார். மேலும், அவர் உணவு, தண்ணீர் இன்றி சோர்வடைந்ததால், வீட்டிலேயே மயக்கமடைந்துள்ளார் என்பது தெரியவந்தது. இறந்த தாயின் உடலுடன் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தண்ணீர், உணவு இன்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அண்ணனை கொலை செய்த தம்பி; உடந்தையாக இருந்த தாயும் கைது

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
The brother who attack his brother; The accomplice mother was also arrested

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி கொலை செய்ததும், அதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பீமநகர் சேர்ந்தவர் பர்வீன் பானு (வயது 48). இவருக்கு தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாஹிர் ( 29) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தமிமுன் அன்சாரி ஆட்டோ டிரைவராகவும், டீ மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

குடி போதைக்கு அடிமையான தமிமுன் அன்சாரியின் நடவடிக்கை பிடிக்காததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் தினமும் தமிமுன் அன்சாரி தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று இரவு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட தம்பி சையது அபுதாஹிர் வீட்டில் இருந்த  அரிவாளால் தமிமுன் அன்சாரியின் தலையில் வெட்டினார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தில் மின்வயரை சுற்றி இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே தமிமுன் அன்சாரி இறந்து விட்டார். விபரீதத்தை உணர்ந்த பர்வீன் பானு அதிகாலை 4 மணி அளவில் யாரும் அறியாத வகையில் சையது அபுதாகீருடன் சேர்ந்து தமிமுன் அன்சாரியின் உடலை அவரது ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் நீரில் போட்டு விட்டு வர முடிவு செய்தார்.

அதன்படி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உடலை இறக்கும் போது இருசக்கர வாகனங்கள் வரவே உடலை அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பி விட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.பாலத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவினை ஆய்வு செய்து ஆட்டோ நம்பரை கண்டுபிடித்தனர். பின்னர் ஆட்டோ உரிமையாளர் யார்?  மாநகர  சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கொலையாளிகள் பர்வீன் பானு மற்றும் சையது அபுதாகிர் என உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Further increase in water flow in Cauvery river

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இன்று (22.07.2024) காலை நிலவரப்படி வினாடிக்கு 74 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒகேனக்கலுக்கு நேற்று (21.07.2024) மாலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 74 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான நீர்வரத்து காரணங்களால் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் 7வது  நாளாக இன்றும் பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று மதியம் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.