/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/courtorderni.jpg)
மத்தியப் பிரதேசம் மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ள அத்ரைலா பகுதியைச் சேர்ந்தவர் சரோஜ் கோல் (50). இவருடைய மகனுக்கு காஞ்சன் கோல் (24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு சரோஜ் கோலும், காஞ்சன் கோலும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, மாமியார் மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மருமகள் காஞ்சன் கோல், வீட்டில் இருந்த கத்தியை வைத்து மாமியாரை சுமார் 95 முறை சரமாரியாக வெறி கொண்டு குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சரோஜ் கோல் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, வீட்டுக்கு திரும்பி வந்த சரோஜ் கோலின் மகன், தனது தாய் இருந்த கோலத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து, தனது தாய் சரோஜ் கோலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மாமியரை படுகொலை செய்த காஞ்சன் கோலை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ரேவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், 95 முறை கத்தியால் கொலை செய்த காஞ்சன் கோலுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)