Advertisment

வன்புணர்வு செய்ய முயன்ற தந்தையை கொன்று புதைத்த மகள்!

தன்னை வன்புணர்வு செய்ய முயன்ற தந்தையை வெட்டிக் கொலைசெய்து மகள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

murder

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அசாம் மாநிலம் பீஸ்வாநாத் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் முதுகலை பட்டம் படித்துவருகிறார். இவரது வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் இருந்து 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் அழுகிய சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பிரேதப்பரிசோதனையில் இறந்தவர் இளம்பெண்ணின் தந்தைஎன்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர்நால்வரைக் கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம், அவரது தந்தை தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதனைத் தடுத்த இளம்பெண்ணை அவர் கோடரியால் தாக்க முயன்றபோது, அதைப் பிடுங்கி தனது தந்தையை வெட்டிக்கொன்றுள்ளார். இதையடுத்து, வீட்டில் ஒருஅறையில் இறந்த தந்தையின் சடலத்தை மறைத்து வைத்திருந்த அவர்கள், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 15 அடி ஆழத்திற்கு குழிதோண்டி மார்ச் 7ஆம் தேதியன்று சடலத்தைப் புதைத்துள்ளனர்.

பாலியல் தொந்தரவு தந்ததுதான்கொலைக்கான காரணம் என சம்மந்தப்பட்ட இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தாலும், இந்தக் கொலையில் சொத்துப் பிரச்சனை காரணமாகஇருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Assam sexual harassment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe