Advertisment

“எங்கள் குடும்பத்தில் வரமாக இந்த மகள்..” பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்துவந்த நெகிழ்ச்சி சம்பவம்..! 

publive-image

ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் நிம்டி சந்தாவட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனுமன் பிரஜாபத். இவரது மனைவி சுக்கி தேவி. நாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் 3ஆம் தேதி சுக்கி தேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 35 வருடங்களுக்குப் பிறகு அவர்களது குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் அவர்கள் அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர்.

Advertisment

வழக்கமான முறைப்படி மருத்துவமனையில் இருந்து ஹர்சோலாவில் உள்ள சுக்கி தேவியின் தாய் வீட்டிற்கு தாய் மற்றும் குழந்தையை அனுப்பிவைத்துள்ளனர். அதன்பிறகு சுக்கி தேவியை தனது வீட்டுக்கு அழைத்துவர அவரது கணவர் ஹனுமன் பிரஜாபத் புதிய முயற்சியை மேற்கொண்டார்.

Advertisment

35 வருடங்களுக்குப் பிறகு தங்கள் குடும்பத்திற்கு வந்த முதல் பெண் குழந்தை எனும் காரணத்தினால், அக்குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து அக்குழந்தையின் தாத்தா மதன் லால், “35 வருடங்கள் கழித்து எங்கள் குடும்பத்தில் வரமாக இந்த மகள் பிறந்துள்ளார். அதற்காக இந்த ஏற்பாடுகளை செய்தோம். அவரின் அனைத்து கனவையும் நான் நிறைவேற்றுவேன்” என அக்குழந்தையின் தாத்தா தெரிவித்துள்ளார்.

Rajasthan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe