சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்ற இளம்பெண் விதியை மீறியதாக போலீசார் விசாரித்ததற்கு 'தான் எம்.எல்.ஏ வின் மகள் எனது காரையே நிறுத்துவீர்களா' என வாக்குவாதம் செய்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவில்கார் ஒன்று சிக்னலில் நிற்காமல் சென்றது. உடனே பின்தொடர்ந்து சென்ற போக்குவரத்து போலீசார் காரை நிறுத்தினர். உள்ளே இருந்த பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலியின் மகள் கீழே இறங்கி 'எம்.எல்.ஏ மகளானஎனது காரையே நிறுத்துவீங்களா' எனப் போக்குவரத்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இதனைப் படம்பிடித்து கொண்டிருந்த கேமராக்களை தள்ளிவிட்டார். இருந்தும் போலீசார் அந்த காருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் அவருடன் கூட வந்த நண்பர் 10 ஆயிரம் ரூபாயை செலுத்தி காரை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.