நாடு முழுவதும் கரோனாபாதிப்புநாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மத்திய அரசு ஐந்தாம் கட்ட பொதுமுடக்கதளர்வுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படிஅக்டோபர் 15 ஆம்தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்களைதிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்டோபர் 15-ஆம் தேதிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் எனவும்மத்திய அரசு தெரிவித்துள்ளது.