Advertisment

சமூக நீதிக்கான கூட்டமைப்பு மாநாட்டிற்கான தேதி அறிவிப்பு

Date announcement for Federation of Social Justice Conference

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் 2 வது மாநாட்டிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் ( All India federation For Social Justice) முதல் தேசிய மாநாடு டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. என தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரிலும் காணொளி வாயிலாகவும் பங்கேற்றிருந்தனர்.

Advertisment

இந்நிலையில் திமுக தலைமையிலான சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் 2 வது தேசிய மாநாடு செப்டம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும், பல்துறை அறிஞர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Delhi Meeting
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe