Skip to main content

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு! 

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Date announcement for the budget session of Parliament

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘நாடாளுமன்றம் நாட்டுக்கானது, கட்சிக்காக அல்ல’  - பிரதமர் மோடி பேச்சு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Parliament is for the country, not for the party PM Modi's speech

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (22.07.2024) தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (23.07.24) தாக்கல் செய்ய உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இன்று சவானின் முதல் திங்கட்கிழமை. இந்த புனிதமான நாளில் ஒரு முக்கியமான அமர்வு தொடங்குகிறது. சவானின் முதல் திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று முழுவதும் இது ஒரு நேர்மறையான அமர்வாக இருக்க வேண்டும். 

Parliament is for the country, not for the party PM Modi's speech

கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த அரசு, மூன்றாவது முறையாக முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வது பெருமைக்குரிய விஷயம். எங்களின் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான திசையை இன்றைய பட்ஜெட் தீர்மானிக்கும். இந்த பட்ஜெட் நமது  விக்சித் பாரத் கனவுக்கு வலுவான அடித்தளமாக அமையும். அனைத்துக் கட்சிகளும் கட்சி எல்லைகளுக்கு அப்பால் எழுந்து நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து, அடுத்த 4.5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தின் இந்த கண்ணியமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் 140 கோடி மக்களால் பெரும்பான்மை பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் குரலை நசுக்கும் முயற்சியை நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். சுமார் 2.5 மணி நேரம் பிரதமரின் குரலை நசுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாட்டு மக்கள் எங்களை நாட்டுக்காக சேவையாற்ற அனுப்பி வைத்துள்ளனர். கட்சிக்காக அல்ல. இந்த நாடாளுமன்றம் நாட்டுக்கானது, கட்சிக்காக அல்ல” எனத் தெரிவித்தார். 

Next Story

“தெருவில் நடக்கும் விவாதம் போல் நாடாளுமன்றம் செயல்படக் கூடாது” - சபாநாயகர் ஓம்.பிர்லா

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Speaker Om Birla said Parliament should not act like a street debate

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் மக்களவையின் சபாநாயகர் பதவிக்காகத் தேர்தல் நடைபெற்றதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லா வெற்றி பெற்று சபாநாயகர் ஆனார். அதனையடுத்து, 18வது மக்களவையின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த அமர்வில், ஜனாதிபதிக்கு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் காரசார விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா, தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்றார். அங்கு சென்ற அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தீவிர சீக்கிய போதகர் அம்ரித்பால் சிங் மற்றும் பயங்கரவாத நிதியுதவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொறியாளர் ரஷீத் சிறையில் இருந்தபோது பஞ்சாபின் கதூர் சாஹிப் மற்றும் ஜே-கேவின் பாரமுல்லாவில் இருந்து சுயேட்சைகளாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பதவிப்பிரமாணம் செய்திருக்கிறார்கள். மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதைக் காட்டுகிறது. 

மக்களவையில் பலமான எதிர்க்கட்சி என்பது கட்டமைக்கப்பட்ட முறையில் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகும். இவை சவால்கள் அல்ல, ஒரு வாய்ப்பு. வலுவான எதிர்க்கட்சி தனது கருத்துக்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒப்பந்தங்களும், கருத்து வேறுபாடுகளும் ஜனநாயகத்தின் ஒரு பகுதி. பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் கருத்துக்களையும் அரசாங்கம் அறிந்து கொள்கிறது. பார்வைகள் அதிகமாக இருந்தால் நல்லது. ஆனால், நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதத்திற்கும், தெருவில் நடக்கும் விவாதங்களுக்கும் நாட்டு மக்கள் சில வித்தியாசங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினார்.