நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு!

central-vista

நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில், வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதே சமயம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14ஆகிய தேதிகளில்  இரு அவைகளிலும் அமர்வுகள் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பல்வேறு  விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்பதால் இந்தக் கூட்டத்தொடரில் அனல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

monsoon session Parliament
இதையும் படியுங்கள்
Subscribe