
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை இளைஞர் ஒருவர் 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் வைத்து பின் உடல் பாகங்களை டெல்லி முழுவதும் வீசிய சம்பவம்அண்மையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பெண் ஒருவர்தனதுகணவனை மகன் உதவியுடன் 22 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் கிழக்கு டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
கிழக்கு டெல்லி பாண்டவர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அஞ்சன்தாஸ்-பூனம் தம்பதி. இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருந்த நிலையில் அஞ்சன்தாஸுக்கு பல பெண்களுடன் முறையற்ற தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் மனைவி பூனம் அஞ்சன்தாஸை இதுதொடர்பாக பலமுறை கண்டித்துள்ளார்.
ஆனாலும் அஞ்சன்தாஸ் முறையற்ற தொடர்பைக் கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பூனம் மகன் உதவியுடன் கடந்த ஜூன் மாதம் கணவருக்குப் பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் கணவனின் உடலை 22 பாகங்களாக வெட்டினார். மகனின் உதவியுடன் அவற்றைசிறு சிறு மூட்டைகளாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். அவ்வப்போது உடல் துண்டுகளை டெல்லி கிழக்குப் பகுதியில் வீசியுள்ளார்.
அதே பகுதியில்நிகழ்ந்த வேறொரு கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மனித உடல் பாகங்களை போலீசார் கண்டுபிடித்தனர். அது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிக்கிய பூனத்திடம் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)