ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார் படத்தின்' டிரெய்லர் மும்பையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/RAJINI KANTH8.jpg)
இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். 'ஒரிஜினலாவே நான் வில்லன் மா' என்று ரஜினி பேசும் வசனம் தர்பார் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் பேசிய ரஜினிகாந்த், "அரசியலில் நுழைய வேண்டாம் என என்னிடம் அமிதாப் பச்சன் கூறினார். 60 வயதில் மூன்று விஷயங்களை கடைபிடிக்கும் படி அமிதாப் பச்சன் எனக்கு அறிவுரை வழங்கினார். உடற்பயிற்சி, சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்; அரசியலில் நுழையக்கூடாது என அறிவுரை வழங்கினார். ஆனால் அமிதாப் சொன்ன மூன்று விஷயங்களில் இரண்டு விஷயங்களை மட்டுமே கடைப்பிடிக்க முடிந்தது". இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
Follow Us