Skip to main content

இன்று தீவிர புயலாக வலுப்பெறும் ‘ஆபத்து’ புயல்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

A 'dangerous' storm strengthening into a severe storm today

 

தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்கு வைக்கப்படும் பெயரை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று மாலை புயலாக மாறியது. முன்னதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருமாறினால் அதற்கு ‘பிபோர்ஜோய் புயல்’ எனப் பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதே போல் புயலுக்கு ‘பிபோர்ஜோய் புயல்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்க தேசம் பரிந்துரைத்துள்ள இந்த புயலுக்கு தமிழில் ‘ஆபத்து’ என்று பொருள்.

 

இந்த புயல் இன்று வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரையிலான, நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Tuticorin fishermen banned from going to sea
கோப்புப்படம்

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த முன்னறிவிப்பில், ‘தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜனவரி 11 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் விடுத்திருந்த எச்சரிக்கையின் படி, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 300 விசைப் படகுகளும், 2 ஆயிரம் நாட்டுப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.