கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனைக் குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் பால் உற்பத்தி விவசாயிகள், தாங்கள் கறந்த பாலுக்கு உரிய விலை கிடைக்காததால் கடந்த 5 நாட்களாக மிகவும் விலை குறைத்து பாலை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது கரோனா அச்சத்தால் பால் விலை அதளபாதாளத்திற்குச் சென்றதால், உற்பத்தி செய்த பாலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.அதானால் அருகில் இருந்த ஆற்றின் கால்வாயில் 'கரோனாவுக்குச் சமர்ப்பணம்' என்று கூறியவாறே பாலை ஊற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இந்நிலையில்,கர்நாடகாவில் கரோனா தொற்றின் காரணமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.