ADVERTISEMENT

இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான தினசரி கரோனா பாதிப்பு!

10:13 AM Apr 07, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒரேநாளில், இத்தனை பேருக்கு கரோனா உறுதியானது இதுவே முதல்முறையாகும்.

ADVERTISEMENT

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 630 உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் ஒரேநாளில் 55 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. டெல்லியில் 5100 பேருக்கு ஒரேநாளில் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கரோனா பாதிப்பு அதிகரிப்பால், புதிதாக இரண்டு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க குஜராத் உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், அங்கு 20 நகரங்களில், இன்றுமுதல் இம்மாத இறுதிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்த இரவுநேர ஊரடங்கு இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள் ஏப்ரல் 30 வரை சனிக்கிழமைகளில் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT