Advertisment

இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான தினசரி கரோனா பாதிப்பு!

corona

இந்தியாவில் கரோனாவின்இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒரேநாளில், இத்தனை பேருக்கு கரோனாஉறுதியானது இதுவே முதல்முறையாகும்.

Advertisment

மேலும், கடந்த 24 மணிநேரத்தில்கரோனாபாதிக்கப்பட்ட 630 உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் ஒரேநாளில் 55 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. டெல்லியில் 5100 பேருக்கு ஒரேநாளில் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையே, கரோனாபாதிப்பு அதிகரிப்பால், புதிதாக இரண்டு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவதுகுறித்து முடிவெடுக்க குஜராத் உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், அங்கு 20 நகரங்களில், இன்றுமுதல் இம்மாத இறுதிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்த இரவுநேரஊரடங்கு இரவு 8 மணிமுதல்காலை 6 மணிவரைஅமலில் இருக்குமெனஅறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்கள் ஏப்ரல் 30 வரை சனிக்கிழமைகளில் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

night curfew India corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe