ஒன்றரை லட்சத்தை நெருங்கும் தினசரி கரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கையும் உயர்வு!

corona

இந்தியாவில் கரோனாவின்இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒரு லட்சத்திற்கும்மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைவிட கரோனாபரவும் வேகம் அதிகரித்திருப்பதாகமத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. கரோனாபரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில்1 லட்சத்து 45,384 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை, ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனாஉறுதிசெய்யப்பட்டதுஇதுவே முதல்முறையாகும். மேலும், கடந்த 24 மணி நேரத்தில்கரோனாவால்பாதிக்கப்பட்ட 794 பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும்கரோனாதொடர்ந்து அதிகரித்து வருகிறது. மஹாராஷ்ட்ராவில் ஒரேநாளில் 59,000 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தின் மும்பை நகரில் மட்டும் ஒரே நாளில்9,200 பேருக்கு கரோனாபாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று ஒரே நாளில்8,521 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 9,695 பேருக்கும் கரோனாபாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனாஅதிகரிப்பால் டெல்லி அரசு, பள்ளிகளை காலவரையின்றி மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

corona virus India Maharashtra
இதையும் படியுங்கள்
Subscribe