
இந்தியாவில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை தண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 417 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இதுவரை இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,63,17,927 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், கரோனா பாதிக்கப்பட்ட 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனாவிற்கு 4,85,053 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 84 ஆயிரத்து 825 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மொத்தமாக இதுவரை இந்தியாவில் 3,47,15,361 பேர் கரோனா உறுதி செய்யப்பட்டு குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது . தற்பொழுது வரை நாடுமுழுவதும் 11,17,531 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.