corona

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கரோனாபரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தன. மேலும் பல கரோனாதடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

Advertisment

தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனாஉறுதியாகிவந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. இந்தநிலையில், நேற்று (07.06.2021) 86,498 பேருக்கு மட்டுமே கரோனாஉறுதியானது. 63 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனாபாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மேலும், இந்தியாவில் கரோனாபாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13,03,702 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில்தான் அதிககரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரேநாளில்19,448 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பிறகு, முதன்முறையாக தமிழ்நாட்டில் 20 ஆயிரத்திற்கு கீழ் தினசரி கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.