/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thequint/2017-12/6ac91257-6f9e-47f7-81bb-3bbca23ae3ef/Dhoni.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்பா நல்லவரா? கெட்டவராக? என்ற நாயகன் வசனகேள்விக்கு தோனியின் செல்லமகள்ஸ்மார்ட் பதில் கூறி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோனியின் ரசிகர்கள் எப்படி அவரின் ஆட்டத்தை களத்தில் ரசிப்பார்களோ அதேபோல் தோனியின் மகள் ஜிவாவிற்கும்ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது இணையத்தில். தோனி தனது மகளுடன் விளையாடுவது, செல்லமாக கொஞ்சுவது என க்யூட் விடியோக்கள் வெளியாகி இணையத்தை அடிக்கடி கலக்கி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் தோனியின் மனைவி சாகபஷி தோனிதான். அவர்தான் தன் செல்ல மகள் தோனியுடன் விளையாடும் காட்சிகளை வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச் நடப்பதால் தோனி வீட்டில் ஓய்வு பெற்றுவருகிறார். அவருக்கு ஓய்வு என்றாலே தனது மகளுடன் விளையாடுவதுதான். அண்மையில் வெளியான வீடியோவில் தோனி தனது மகளுடன் பலூன்கள் போட்டு விளையாடி கொண்டிருக்கிறார். அப்போது தோனியின் மனைவி சாகபஷிதோனிதனது மகள் ஜிவாவிடம் ''அப்பா நல்லவரா? கெட்டவரா?'' எனகேட்கிறார்அதை கேட்ட ஜிவா கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்பாமட்டுமல்ல எல்லாரும் நல்லவர்கள்தான் என ஸ்மார்ட் பதில் கொடுத்துள்ளார். இந்த வீடியோகாட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)