Advertisment

சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்த தந்தை- 14 வயது மகள் போலிஸில் புகார்...

child rape

மஹாராஷ்ட்டிரா மாநிலம், தானே பகுதியில் பெற்றெடுத்த 14வயது மகளை தந்தையே பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது இவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Advertisment

மனைவியை பிரிந்து, தனது மகளுடன் தனியாக 7 வருடம் வாழ்ந்து வந்திருக்கிறார் இந்த 40 வயது தந்தை. ”கடந்த நான்கு வருடங்களாக மீண்டும் மீண்டும் தன்னை பாலியல் வன்கொடுமைகள் செய்து வருகிறார்” என்று மகளே போலிஸாரிடம் கூறியிருக்கிறார். பின்னர், துன்புறுத்தலை தாங்க முடியாமல் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் உதவியை நாடி, புதன் கிழமை அன்று போலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

உடனடியாக குற்றம்சாட்டப்பட்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தந்தையின் மீது இபிகோ பிரிவு 376 கீழும், போஸ்கோ சட்டத்திலும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது.

Child abuse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe