Skip to main content

பாலியல் பலாத்கார புகார்: பிரபல சாமியார் மீது சி.பி.ஐ. வழக்கு

Published on 26/10/2018 | Edited on 26/10/2018
daati maharaj


டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வரும் பிரபல சாமியார் தாதி மகராஜ். பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து இவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

 
டெல்லி பதேபூர் பேரி காவல் நிலையத்தில், தாதி மகராஜ் மீது ஒரு பெண் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரில், தாதி மகராஜ் அவரது ஆசிரமத்தில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாகவும் கூறியிருந்தார். மேலும், இந்த சம்பவத்திற்கு தாதி மகராஜின் 3 சகோதரர்கள் மற்றும் ஒரு பெண் உடந்தையாக இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். 
 

இந்த புகாரை பெற்ற போலீசார் கடந்த ஜூன் மாதம் 22–ந் தேதி அந்த ஆசிரமத்திற்கு சென்று விசாரித்தனர். ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியே இந்த புகாரை கிடப்பில் போட்டனர். பலமுறை இந்த பெண் டெல்லி பதேபூர் பேரி போலீஸ் நிலையத்தில் இந்த புகார் குறித்து கேட்டபோது சரிவர போலீசார் பதில் அளிக்கவில்லை. 
 

பலமுறை காவல்நிலையத்திற்கு அலைந்த அந்த பெண், டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியிருந்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு புகாரை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சாமியார் தாதி மகராஜ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
 


 

சார்ந்த செய்திகள்