Advertisment

'விபத்துக்குள்ளான லாரி... வெடித்து சிதறிய சிலிண்டர்கள்' உயிர் தப்பிய பள்ளி குழந்தைகள்!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் மயிரிழையில் பள்ளிக் குழந்தைகள் உயிர்தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி வதோதராவில் ஒன்று சூரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த போது நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. அதே சமயம் லாரியின் எதிர்புறத்தில் பள்ளிக்குழந்தைகள் 20 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று வந்துள்ளது. திடீரென எதிர்புறத்தில் இந்த விபத்து நடந்ததால் பள்ளி பேருந்து ஓட்டுநர் வாகனத்தை லாரிக்கு மிக அருகில் பிரேக் பிடித்து நிறுத்தியுள்ளார்.

Advertisment

அப்போது லாரியில் இருந்த கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்து தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. உடனடியாக சுதாரித்த பள்ளி வேன் ஓட்டுநர் பள்ளி குழந்தைகளை பத்திரமாக இறக்கி, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe