நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையானது உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி வீட்டுக்கு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்ந்துள்ளது. இதனால் மானிய விலை சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயிலிருந்து 550 ரூபாயாக உயர்ந்துள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலையேற்றம்அமலுக்கு வந்துள்ளது.
அண்மையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்திருந்த நிலையில் தற்போது வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையானது உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.