வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு...!

 Cylinder price hike for commercial use ...!

தொடர்ச்சியாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஒன்றுக்கு 102 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எரிபொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் 19 கிலோ எடைகொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 2,253 ரூபாயிலிருந்து 2,355 ரூபையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமும் செய்யப்படவில்லை. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

cylinder price
இதையும் படியுங்கள்
Subscribe