Skip to main content

'டவ்-தே' புயல்- மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை! 

Published on 16/05/2021 | Edited on 16/05/2021

 

 

CYCLONE HEAVY RAINS UNION CABINET SECRETARY DISCUSSION


அரபிக்கடலில் நிலைக்கொண்டுள்ள 'டவ்-தே' புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இது வடக்கு, வாடா மேற்கே நகர்ந்தும் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே வரும் செவ்வாய்க்கிழமை காலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, கேரளா, குஜராத், கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

 

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படையின் 53 குழுக்கள் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான 16 விமானங்களும், 18 ஹெலிகாப்டர்களும் தயார் நிலை வைக்கப்பட்டுள்ளன.

 

புயல் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்படையின் தென் பிராந்திய வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்படை வீரர்கள் கொச்சி அருகே நிவாரண முகாம்களையும் அமைத்துள்ளனர். மீனவர்களை மீட்கும் பணியில் கடலோரக் காவல்படை கப்பல்கள், படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் 'டவ்-தே' புயல் பாதிப்பு தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழக டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோருடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.  

 

'டவ்-தே' புயல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று (15/05/2021) காணொளி காட்சி மூலம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாநில மகளிர் கொள்கை; தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Tamil Nadu cabinet approves state women  policy

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குத் தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்க வழிவகை செய்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பன போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய மாநில மகளிர் கொள்கைக்கு தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலும் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மற்றும் ஆளுநர் உரை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

கேரள அமைச்சரவையில் மாற்றம்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
Kerala cabinet reshuffle

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். இந்நிலையில், கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள்  தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜு,  துறைமுகங்கள்  துறை அமைச்சர் அஹமது தேவர்கோவில் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதற்கான கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் அளித்துள்ளனர். மேலும் இவர்களுக்கு பதிலாக கே.பி.கணேஷ் குமார் மற்றும் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக டிசம்பர் 29ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.