Advertisment

ஆக்ரோஷமாக கரையை கடந்தது 'அம்பன் புயல்'!

Cyclone Amphan new Update

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிரமடைந்து புயலாக உருவாகியுள்ளது. முதலில் தமிழகத்தை நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்ட இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்குவங்கம் நோக்கி நகர்ந்தது.இந்த புயல் வடகிழக்காக மேலும் நகர்ந்து சென்று மேற்கு வங்கத்தின் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் போது மணிக்குச் சராசரியாக 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும், அதிகபட்சமாக 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

Advertisment

கரோனா பாதிப்பு நெருக்கடிக்குள் இருந்த மத்திய, மாநில அரசுகளுக்கு அம்பன் புயல் மேலும் ஒரு சவாலாக அமைந்தது. இருப்பினும்புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கத்தில் இன்று மேலும் 5 லட்சம் மக்களையும், ஒடிஷாவில் 1,58,640 மக்களையும் வெளியேற்றி பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்நிலையில் மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக உம்பன் புயல் கரையை கடந்ததாகவும், புயல் கரையை கடந்தபோது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

Advertisment

indian metrological department amphan cyclone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe