Skip to main content

ஆக்ரோஷமாக கரையை கடந்தது 'அம்பன் புயல்'!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

Cyclone Amphan new Update

 

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிரமடைந்து புயலாக உருவாகியுள்ளது. முதலில் தமிழகத்தை நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்ட இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்குவங்கம் நோக்கி நகர்ந்தது. இந்த புயல் வடகிழக்காக மேலும் நகர்ந்து சென்று மேற்கு வங்கத்தின் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் போது மணிக்குச் சராசரியாக 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும், அதிகபட்சமாக 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.  


கரோனா பாதிப்பு நெருக்கடிக்குள் இருந்த மத்திய, மாநில அரசுகளுக்கு அம்பன் புயல் மேலும் ஒரு சவாலாக அமைந்தது. இருப்பினும் புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கத்தில் இன்று மேலும் 5 லட்சம் மக்களையும், ஒடிஷாவில் 1,58,640 மக்களையும் வெளியேற்றி பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்நிலையில் மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக உம்பன் புயல் கரையை கடந்ததாகவும், புயல் கரையை கடந்தபோது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.  
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வடகிழக்கு பருவமழை விலகியது’ -  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Northeast Monsoon has left Chennai Meteorological Center Information

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனையொட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்று (14.01.2024) விலகியது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (14.01.2024), நாளையும் (15.01.2024) வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதே சமயம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

புதிய புயல் 'மிதிலி' - இந்திய வானிலை மையம் அறிவிப்பு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

New Cyclone 'Mithili' - India Meteorological Department Announces

 

தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

நாளை புயல் உருவாகும் பட்சத்தில் அந்த புயலுக்கு மிதிலி (Midhili) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு கொடுத்த பரிந்துரையின் பேரில் இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிஸா மாநிலத்திற்குச் செல்லும் பொழுது மழைக்கான வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக வங்கதேசத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5.30 நிலவரப்படி 18 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. மேலும் இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடிய காரணங்களால் தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு குறைவு. தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாகத் தென் மாவட்டத்தை ஒட்டிய கடலோர மாவட்டங்களில் மிதமான அளவில் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.