Advertisment

பெயிண்டரை கத்தியால் வெட்டி  கொல்ல முயன்ற 6 பேர் கைது!

புதுச்சேரி வீமன் நகர் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (29). இவர் மேடை அலங்கரிப்பு மற்றும் பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வருகின்றார். அவ்வப்போது சிறு, சிறு தகராறில் ஈடுபட்டு வந்ததால் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் 08- ஆம் தேதி இரவு 08.00 மணியளவில் ஆறுமுகம் திண்டிவனம் செல்லும் சாலையில் கோரிமேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் 6 பேர் வந்துள்ளனர். அதில் 4 பேர் மட்டும் இறங்கி, கொலை செய்யும் நோக்கத்தில் ஆறுமுகத்தை சராமாரியாக முகத்தில் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் ஆறுமுகத்தை மீட்டு அருகில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Advertisment

 Cut the painter with a knife    Six arrested for attempted incident police

இது குறித்த புகாரின் அடிப்படையில், தன்வந்தரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம், பிரேம் (எ) பிரபாகரன், வெற்றி (எ) வெற்றிச்செல்வம், சாலமோன், மணி, மற்றொரு வெற்றி ஆகியோர்தான் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மணிரத்தினம், பிரேம், வெற்றிச்செல்வம், சாலமோன் ஆகியோர் உட்பட 6 பேரை கைது செய்தனர்.|

Advertisment

 Cut the painter with a knife    Six arrested for attempted incident police

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2016-ல் நடைபெற்ற ஒரு தகராறில் ஆறுமுகம் மணிரத்தினத்தை கத்தியால் குத்திவிட்டதாகவும், இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ஆறுமுகம் வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும், இதனால் முந்திக்கொண்டு ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.

alt=" Cut the painter with a knife Six arrested for attempted incident police " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4b1d92ba-872e-46f6-95a0-d305d7a3d00d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_64.jpg" />

POLICE ARRESTED incidnet painter Pondicherry India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe