காதலிக்க மறுத்த பெண்ணுக்கு வாயில் வெட்டு... இளைஞர் கைது!

Cut the mouth of the woman who refused to love... youth arrested!

காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் வாயில் வெட்டிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் கோல்கொண்டாவை சேர்ந்தவர் ரோகித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். முதலில் அந்த பெண்ணுடன் நட்பாக பழகி வந்த நிலையில், அவர் பலமுறை தனது காதலை அப்பெண்ணிடம் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியும் அந்த பெண் காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த ரோகித் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்பெண்ணை அவனது நண்பன் மூலம் பூங்காவிற்கு வர வைத்துமறைத்து வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணின் வாயில் வெட்டினான். இதனால் பெண்ணின் மூக்கு, வாய், கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காதலிக்க மறுத்த பெண்ணை வாயில் வெட்டிய இளைஞர் ரோகித்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

incident love police telangana
இதையும் படியுங்கள்
Subscribe