கரோனா மற்றும் ஒமிக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்துவருகிறது. இதனால், கேரளா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் வார இறுதியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 10 மணிமுதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை டெல்லியில் வார இறுதி ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.