/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NPIC-201872421340-std_1.jpg)
புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதுபோல ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் போர் பதட்டமும் அதிகரித்தது. இந்நிலையில் ஜம்மு நகரில் நடைபெற்ற பொதுமக்கள் பேரணியில் கலவரம் வெடித்தது. அங்கு நடைபெற்ற போராட்டங்களில் 3 போலீசார் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன் இணையதள சேவை அங்கு முடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்புவதால் ஊரடங்கு நிலை தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் 11 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டம் மற்றும் ஒழுங்கு பணியை மேற்கொள்ளும் பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)