Curfew extended till May 17

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.இந்நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 35,043 என்ற எண்ணிக்கையில் இருந்து,35,365 என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அதாவது, மே 17ஆம் தேதி வரைபொதுமுடக்கம்நீட்டிப்பு செய்யப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என ஜோன்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சிவப்பு மண்டலமாக உள்ள பகுதிகளில் இந்த ஊரடங்கில் எந்த தளர்வும்இருக்காது. மற்ற பகுதிகளில்இருக்க வாய்ப்புள்ளது. சென்னை, டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் சிவப்பு மண்டலமாகவருவதால் தமிழகத்தில் சென்னையிலும் இந்த ஊரடங்கு தளர்வு இல்லாத நிலையில் தொடரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.